பிள்ளையார், முழுமுதற் கடவுள். எந்தவொரு செயலைச் செய்வதாக இருந்தாலும், எந்தவொரு கடவுளை வணங்குவதாக இருந்தாலும், முதற்கடவுள் ஆனைமுகனை வணங்கிவிட்டுத்தான் வழிபாட்டைத் தொடங்குவோம்.
விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
பெயர் விளக்கம்
வி – இதற்கு மேல் இல்லை என்று பொருள்.
நாயகர் – தலைவர் என்று பொருள்.
கணபதி
க – ஞானத்தைக் குறிக்கிறது.
ண – ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது.
பதி – தலைவன் என்று பொருள்படுகிறது.
இதர பெயர்கள்
முதன்மைக் கடவுளான விநாயகரின் உண்மையான பெயர் தான் பிள்ளையார். அதன் பின்னர் வந்தது தான் விநாயகர், கணபதி, கணேஷ், விக்னேஷ்வரன், ஆனைமுகத்தோன் போன்ற பெயர்கள் எல்லாம்.
விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பார்கள். வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்வார்கள்
நான் படித்தறிந்த கதைகளின் சிறு தொகுப்பு
விநாயகர் கதை 1
மஞ்சள் பிள்ளையார்
ஒருமுறை பார்வதி தேவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குளிக்கச் சென்றாள். அப்போது, காவலுக்கு யாருமில்லை என்பதால், என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே, தன்னுடைய கையில் இருந்த மஞ்சளை உருட்டி உருட்டி கூம்பு வடிவில் ஒரு உருவத்தைச் செய்துவிட்டார். அதை ஒரு சிறுவனைப் போல், உயிருள்ளது போல் பாவித்தாள். அதை வாசலில் நிறுத்தியாள். நீ இங்கேயே இரு. நான் குளிக்கப் போகிறேன். யாராவது வீட்டுக்குள் வந்தால் உள்ளே விடாது என்று சொல்லிச் சென்றார்
சிவன் வருகை
பார்வதி குளிக்கச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே சிவபெருமான் வீட்டுக்கு வந்தார். ஆனால் மஞ்சளால் வடிக்கப்பட்ட அந்த சிறுவன் ிவனை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினான்.

என்னுடைய வீட்டுக்குள் என்னையே போக விடாமல் ஒரு பொடிப்பையன் தடுப்பதா என்று கடும் கோபமுற்ற சிவன், அந்த சிறுவனின் தலையை அப்படியே கிள்ளி எறிந்து விட்டார். குளித்துவிட்டு திரும்பி வந்த பார்வதி, தான் காவலுக்கு வைத்த சிறுவன் தலை கொய்யப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து கண்ணீர் விட்டார்.

யானை வடிவ தலை
பார்வதியின் கண்ணீரைத் தாங்கிக் கொள்ள முடியாத சிவன் தன்னுடைய வேலையாட்களுக்கு ஒரு ஆணையை வெளியிட்டார். அது என்னவென்றால், வடக்கு திசை பார்த்து படுத்திருக்கும் மிருகத்தின் தலையை கொய்து வாருங்கள் என்று கூறினார்.
வேலையாட்களும் காடுகளில் போய் அலைந்து திரிந்தனர். அப்போது, யானை மட்டுமே வடக்கு திசை பார்த்து படுத்திருந்தது. உடனே யானையின் தலையை வெட்டி எடுத்து வைத்துவிட்டு வந்தனர். அதைக்கொண்டு வந்து, கொடுத்ததும், சிவன் வெட்டுப்பட்டு கிடக்கும் சிறுவனாகிய பிள்ளையாரின் உடலோடு யானையின் தலையை ஒட்டி உயிர் கொடுத்து விட்டார்.
2 விநாயகர் தலை பற்றிய இன்னொரு கதை 2
பார்வதி தேவிக்கு விநாயகர் பிறந்ததும், தன்னுடைய குழந்தையை வந்து ஆசிர்வதித்து விட்டுச் செல்லும்படி, தேவலோகத்தில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்தாராம். மற்ற தேவர்கள் அனைவரும் வந்து ஆசிர்வதித்தார்களாம். ஆனால் அந்த நிகழ்வுக்கு சனீஸ்வரன் மட்டும் வரவில்லையாம்.
 உடனே பார்வதி தேவி சனீஸ்வரனை அழைத்து, என்னுடைய குழந்தையை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு சனீஸ்வரனோ நான் யாரைப் பார்த்தாலும், யாருடைய தலையைத் தொட்டாலும், அவருடைய தலை வெடித்து விடும் என்னும் சாபம் எனக்கு இருக்கிறது. அதனால் என்னால் அந்த ஆசிர்வாதத்தை என்னால் கொடுக்க முடியாது என்று சொன்னாலும் அதை பார்வதி ஏற்கவில்லை. நீங்கள் கட்டாயம் ஆசிர்வதிக்கத் தான் வேண்டும் என்று சொன்னார். அவரும் வேறு வழியின்றி பிள்ளையாரை ஆசிர்வதித்தார். உடனே பிள்ளையாரின் தலை வெடித்து சுக்கு நூறாக்கியது. அதனால், பிள்ளையாருக்கு யானையின் தலை பொருத்தப்பட்வே பார்வதி தேவி ஆறுதல் அடைந்தார்.
விநாயகர் பூஜை
ஆவணி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து வந்த சதுர்த்தியில் இந்த விநாயகர் பூஜை ஆரம்பிக்கும். பெணர்மிக்கு அடுத்து சதுர்த்தி வரையிலும் தினமும் பூஜை செய்தாள். அதன்பிறகு மண பிள்ளையாரை மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நதியிலேயே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம ஆகம மரபுகள் மீறாமல் இருப்பது தான் விரதத்தின் பலனாக இருக்கும். இப்படித்தான் ஆரம்பித்தது அவருடைய வரலாறு.
இந்துமதப் புராணங்களின் அடிப்படையில் யானை முகத்துடன் காணப்படும் விநாயகர், முதலில் மனித தலையுடன் இயல்பாகவே பிறந்ததாகவும், பின்னர் அவரது தலை வெட்டப்பட்டதாகவும் அல்லது சனி பகவானின் பார்வையால் தலை கருகியதாகவும் கூறப்படுகிறது. பின்னரே யானையின் தலையை வெட்டி எடுத்துவந்து விநாயகருக்கு பொருத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த காலத்திலேயே விநாயகருக்கு அறுவை சிகிச்சை நடத்தும் அளவிற்கு இங்கே மருத்துவ அறிவியல் வளர்ந்திருந்ததை பிரதமர் மோடியே ஒரு விழாவில் பெருமையாக பேசினார்.
விநாயகரின் தலை வைக்கப்பட்டிருக்கும் குகை.
சரி, அப்படி அகற்றப்பட்ட விநாயகரின் தலையானது உத்தரகாண்டில் புவனேஸ்வர் என்ற கிராமத்தில் உள்ள பாட்டல் புபனேஸ்வர் எனப்படும் நீண்ட மலைக்குகைக்குள் வைக்கப்பட்டிருக்கிறது ! ! ?
இந்த குகைக்குள் செல்லும் பயணம் ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல. 90 அடி ஆழத்தில், 160 மீட்டர் நீளம் கொண்ட குகைக்குள் வளைந்து வளைந்து செல்ல வேண்டும். உடலை பல கோணங்களில் வளைக்கும் ஆற்றல் உடையவர்களே உள்ளே வரை சென்று விநாயகரின் தலையை தரிசித்து வருகின்றனர்.
சுவாச அடைப்பு மற்றும் உடல் நெகிழ்வின்மை காரணமாக பலரும் பாதி வழியிலேயே திரும்பி விடுகின்றனர். மேலும் இந்த குகையிலிருந்து கயிலாய மலைக்கு ஒரு சுரங்கப்பாதை இருப்பதாகவும், அது மிக மிக ஆபத்தான பாதை என்றும், ஆள் அரவமற்ற வழியென்றும் கூறுகின்றனர். ஆனாலும் அந்த சுரங்கம் இன்னும் சிதிலமடையாமல் இருக்கிறது. விநாயகர் குகையிலிருந்து மேலும் பலப்பல கிளைக் குகைகள் பிரிகின்றன. அவை வெவ்வேறு பயண இலக்குகளுக்கு செல்கின்றன.
No comments:
Post a Comment