Sunday, October 18, 2020

Oven Baked Sweet Potato Fries | சர்க்கரைவள்ளிக்கிழங்கு பிரெஞ்ச் பிரைஸ்

 Sweet Potatoes French Fries | சர்க்கரைவள்ளிக்கிழங்கு பிரெஞ்ச் பிரைஸ் 


This is another interesting and yummy recipes. These are simply delicious. Lightly seasoned with just a hint of natural sweetness and roasted to perfection. This is slightly different from the regular fries.

Ingredients 

Sweet Potatoes - 2 ( Medium)

Corn Flour - 2 TBSP 

Garlic Salt -  1 tsp 

Ground Pepper as required 

Oil as required 

Salt to taste

Method 

Peel the sweet potatoes and cut into 1/2” square sticks.

Place the sweet potatoes in large ziplock bag.

Add corn flour, ground pepper, garlic salt, oil and toss to coat evenly.

Place onto a baking sheet lined with aluminum foil and space evenly apart.

Baked in a preheat 425*F oven for 20 minutes.

Turn over and bake another 20 to 15 minutes.

Serve with your dipping sauce and hot cocoa.


சர்க்கரைவள்ளிக் கிழங்கு சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. இந்த கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கிழங்கை சாப்பிடுவதால் உடலில் சத்து தேவைகள் பூர்த்தியாகும்.

தேவையான பொருட்கள் 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 

சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

கார்லிக் உப்பு - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி சீவிக் கொள்ள வேண்டும். 

அதன் ஓரங்களில் முனையை நறுக்கிக்கொள்ள வேண்டும். 

அதை ஒவ்வொன்றாக எடுத்து நடுவில் குறுக்காக நறுக்கிக் கொள்ளவும்.  

பின்பு அதனை 1/2 இன்ச் சைஸில் சதுர குச்சிகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 

ஒரு  சிப்லாக் பையில் நறுக்கிய சர்க்கரைவள்ளிக் குச்சிகள், சோள மாவு, கார்லிக் உப்பு, மிளகுத்தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக குலுக்கிக் கொள்ளவும்.

ஒரு பேக்கிங் ட்ரேயை எடுத்து, இதில் சிறிது எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும்.

பிறகு உப்பு மிளகுத்தூள் கலந்துள்ள சர்க்கரைவள்ளி குச்சிகளை அதன்மீது பரப்பிக் கொள்ளவும். 

அவனில் 425 •F ப்ரீஹீட் செய்து கொள்ளவும். அதன்  பிறகு பேக்கிங் ட்ரேயை வைத்து 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

பின்பு அதனை திருப்பி போட்டு மேலும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். 

சிறிது நேரம் ஆறவிட்டு பறிமாறவும். சுவையான மொறுமொறுப்பான சர்க்கரைவள்ளிக்கிழங்கு பிரெஞ்ச் பிரைஸ் ரெடி!


Warm Regards,

SUBATHRA NARAYANAN

 



Friday, October 16, 2020

Roasted Gram Chutney/பொட்டுக்கடலை தேங்காய் சட்னி

Roasted Gram Coconut chutney tastiest chutney and is perfect combination for Idli, dosa, pongal, upma, kichadi, adai, etc...  In this dish, in this dish, few key ingredients are sautéed along with coconut and grind with roasted gram. 

Ingredients 

Grated Coconut - 1 Cup

Roasted Gram - 4 Tbsp 

Chopped Ginger - 2 Tsp 

Chopped Green Chilli - 2

Chopped Onion - 4 tsp 

Chopped Coriander Leaves- few

Tamarind - little 

Salt to taste

Oil - 1 tsp 

To Temper 

Oil - 1 tsp 

Mustard Seeds - 1/2 tsp 

Urad Dhal - 2 tsp 

Curry Leaves - few

Method 

Heat oil in a pan, add chopped ginger, green chilli, onion and coriander leaves then fry for few minutes.

Add grated coconut and fry for 2 minutes. 

Then add little tamarind and salt, fry for 5 minutes.

Switch off the flame and lets cool down completely.

Transfer this into mixer jar and add roasted gram.

Grind it along with water and grind it as chutney.

Heat oil in a pan, add the tempering ingredients and sauté fry for few seconds.

Transfer this into chutney bowl. And mix well.

Serve with idli, dosa, Adai, upma, etc...

பொட்டுக்கடலை தேங்காய் சட்னி

இது செய்வதற்கு எளிமையானதும், சுவையானதும் ஆகும். தேங்காய் சட்னி துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மற்றும் புளி. சேர்த்து செய்யப்படுகிறது.   காலை டிபனான பொங்கல்,இட்லி,தோசை போன்ற உணவுகளை தேங்காய் சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை.... ட்ரை பண்ணி பாருங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!!

தேவையான பொருட்கள் 

துருவிய தேங்காய் - 1 கப்

பொட்டுக்கடலை - 4 டேபிள் ஸ்பூன் 

நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் - 4 டீஸ்பூன்

நறுக்கிய பச்சை மிளகாய் - 2

நறுக்கிய கொத்தமல்லி - சிறிது

புளி - சிறிது

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை 

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.  அதில் நறுக்கிய இஞ்சி , பச்சை மிளகாய் , வெங்காயம் , கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு அதனுடன் துருவிய தேங்காய் 1 கப் சேர்க்கவும்.

இதை நிமிடம் நன்றாக வதக்கவும். இதில் சிறிது புளி மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

அடுப்பை அணைத்துவிட்டு இவையனைத்தையும் நன்றாக ஆற வைக்கவும்.

இதை மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும். இதை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலக்கவும்.


 




Thursday, October 15, 2020

Crispy Fried Fish/ கிரிஸ்பி பிரைடு பிஷ்

 Crispy Fried Fish is a simple and tasty dish. In this dish, fish fillets are marinated with flour and other spices. Then fry with little oil and serve hot with Chilli sauce, tomato sauce or ranch.


Ingredients 

Fish Fillets - 10 ( small pieces) or 300 g

All Purpose Flour / Maida - 1/2 Cup 

Corn Flour - 2 tbsp 

Garlic Powder - 1/2 tsp 

Dry Ginger Powder - 1/2 tsp 

Paprika Powder - 1 tsp

Ground Pepper - 1 tsp 

Lemon Juice - 2 tbsp 

Salt to taste 

Oil as required 

Water as required 

Method 

In a bowl, add all purpose flour, corn flour, paprika, garlic powder, dry ginger powder, salt, lemon juice, ground pepper, and oil, then mix well.

Add required water and make it as right consistency of batter.

Then add the fish fillets one by one and mix well.

Let it marinate this mix for at least 1 hour.

Heat oil in a dosa pan/ tawa. Add fish fillets one by one and fry in oil.

Flip it into other sides. Let it fry until gets golden brown in color.

Once it cooked both sides, then transfer this dish into serving plate.

Serve with ketchup or ranch.

கிரிஸ்பி பிரைடு பிஷ் 

இது ஒரு சூப்பரான டிஷ். மீன் துண்டுகளை மைதா மாவு, சோள மாவு மற்றும் இதர மசாலாக்களை சேர்த்து குறைவான எண்ணெயில் வறுத்தெடுத்தா சுவையான கிரிஸ்பி பிரைடு பிஷ் ரெடி. இதை சில்லி சாஸ்/தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட ரொம்ப அருமையா இருக்கும். 

தேவையான பொருட்கள் 

சிறிய மீன் துண்டுகள்  - 10

மைதா - 1/2 கப்

சோள மாவு  - 2 டேபிள் ஸ்பூன் 

பூண்டு பவுடர் உப்பு  - 1/2 டீஸ்பூன்

இஞ்சித் தூள் - 1/2 டீஸ்பூன்

பப்ரிக்கா பவுடர் ( சிவப்பு மிளகு வகை ) - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

ஒரு பௌலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும் அதனுடன் எண்ணெய் சிறிது ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

இதனுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து நன்றாக பிசறிக் கொள்ளவும்.

இதை  குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது ஊற வைக்கவும்.

தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். 

அதில் ஊறவைத்த மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்து வறுத்தெடுக்கவும். 

ஒருபுறம் வெந்து சிவந்ததும் திருப்பி போட்டு வறுக்கவும். 

இருபுறமும் நன்றாக வறுபட்டதும் சூடாக பறிமாறவும்.


  











Wednesday, October 14, 2020

Soya Chunks 65/மீல் மேக்கர் 65 / சோயா 65/ Meal Maker 65

 Soya Chunks 65 is all time favorite snacks especially for kids. It has rich in protein. In this dish, Soya Chunks are soaked and squeezed then marinated with some spices and flour. Then finally it is fried in oil and served with ketchup or sauce. It’s a starter of veggie dishes or goes very well with any main dishes. You must try this recipe and enjoy well!



Ingredients

Soya Chunks (Soaked) - 2 Cup

All Purpose Flour - 1/2 Cup 

Corn Flour - 2 tbsp 

Chilli Powder - 1 tsp 

Food Color - 1/4 tsp 

Finely Chopped Ginger - 2 tsp 

Finely Chopped Green Chilli - 2 tsp 

Ground Pepper - 1 tsp 

Lemon Juice - 2 tbsp 

Chopped Coriander Leaves - few

Salt to taste 

Oil as required 

Method 

In a bowl, add all purpose flour, corn flour, ground pepper, chopped ginger, finely chopped green chilli, chopped coriander leaves, salt, chilli powder, food color, lemon juice and little bit oil. 

Then mix well and add required water to get right consistency of batter and make sure the batter should not have any lumps.

Add the soaked soya chunks and mix well. The marination is ready.

Heat oil in a pan, add the marinated soya chunks one by one.

Fry well on both sides or until it’s cooked well completely.

Once it done serve with hot sauce/ ketchup.

மீல் மேக்கர் 65 / சோயா 65


சோயா 65 ஒரு அருமையான புரதச்சத்து நிறைந்த டிஷ். இது செய்வதற்கு எளிமையானது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தது. மாலை நேரத்தில் சாக்லெட் மில்க்குடன் சேர்த்து சாப்பிடும்போது இதை விரும்பி சாப்பிடுவார்கள். குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற சுடச்சுட சூப்பரான பலகாரம். இந்த ரெசிப்பியை நீங்களும் மறக்காம செய்து பாருங்க, கண்டிப்பா உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.


தேவையான பொருட்கள் 

ஊற வைத்த மீல் மேக்கர் - 2 கப்

மைதா மாவு - 1/2 கப்

சோள மாவு  - 2 டேபிள் ஸ்பூன் 

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கலர் பவுடர் - 1/2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் 

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், கலர் பவுடர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,  கொத்தமல்லி , மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் எண்ணெய் (2 டீஸ்பூன்  ) சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.

பின்பு அதனுடன் ஊறவைத்த மீல் மேக்கர் சேர்த்து நன்றாகப் பிசறிக்கொள்ளவும். 

இதை குறைந்த பட்சம் 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரமாவது ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும்.

அதனுடன் ஊறவைத்துள்ள மீல் மேக்கர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான மீல் மேக்கர் 65 ரெடி! இதனை சில்லி சாஸ் தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.






.

Tuesday, October 6, 2020

நாவில் எச்சூற வைக்கும் சிம்பிளான மீன் வறுவல் / Mouthwatering Fish Fry





நாவில் எச்சூற வைக்கும் சிம்பிளான, சூப்பரான, டேஸ்ட்டியான மீன் வறுவல் டிஷ். மீன் வறுவல் ஒரு சுவையான உணவு. மீனில் புரதச் சத்துகள் மிகுந்துள்ளன. இந்த டிஷ் செய்வதற்கு மீனை இந்தியன் மசாலாக்களுடன் பிசைந்து நன்றாக ஊற வைக்க வேண்டும் பிறகு சிறிது எண்ணெயில் வறுத்து மொறுவலாக எடுக்கப்படுகிறது. இது அனைத்து வகையான சாதத்திற்கும் பொருத்தமான சைடு டிஷ் ஆக இருக்கும். மீனில் ஒமோகா-3 என்ற ஒரு வகை அமிலம் உள்ளது. இது நம் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


மேலும் கண்பார்வை குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, இதயநோய் ஆகியவற்றிலிருந்து மீன் உணவு நம்மைப் பாதுகாக்கிறது. மீன் உடலுக்கு மிகவும் ஏற்றது. மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது.

இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் விளங்குகிறது. எனவே நாம் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 தேவையான பொருட்கள் 

மீனை ஊறவைப்பதற்கான மசாலா

மீன் துண்டுகள் - 5

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு 

எண்ணெய் - 2 டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி - சிறிது

மீன் வறுப்பதற்கு 

எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மீனை ஊற வைப்பதற்கான மசாலாக்களை எடுத்துக்கொள்ளவும். 

அதனுடன் உப்பு எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லி மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கிளறி கொள்ளவும். 

பிறகு மீன் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பிசறிக்கொள்ளவும். 

இதை குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது பிரிட்ஜில் ஊற வைக்க வேண்டும். 

தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் மீன் துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து வைக்கவும்.

இரண்டு புறமும் முழுமையாக வெந்து சிவந்து முறுவலாக வரும்வரை நன்றாக வறுத்தெடுக்கவும். 

Mouthwatering Simple Fish Fry

Ingredients 

To Marinate 

Fish Fillets - 5

Turmeric Powder - 1/2 tsp 

Chilli Powder - 1/2 tsp 

Coriander Powder - 2 tsp 

Fresh Ground Black Pepper - 1/4 tsp 

Lemon Juice - 2 tsp 

Oil - 2 tsp 

Salt to taste 

Chopped Coriander Leaves - few

Method 

In a bowl add all the spices, salt, lemon juice, oil and chopped coriander leaves then mix well.

Add the fish pieces one by one and marinate well with spices.

Then refrigerate this for at least 1 hour.

Heat oil in a dosa pan. Add the fish fillets one by one. Let it fry well on both sides.

Flip it into other sides and make sure both sides fried well in oil.

Switch off the flame and serve hot with any rice.

- Subathra Narayanan-






Monday, October 5, 2020

வருத்தரைச்ச கடலைப்பருப்பு தேங்காய் சட்னி /Roasted Channa Dhal Coconut Chutney




 It’s a perfect choice for idli, dosa, Pongal, upma, kichadi and any fritters. Roasted dhal and coconut gives nice aroma to that dish. Enjoy well with your yummy food.





Ingredients 

Grated Coconut - 1 cup

Channa Dhal/ Kadalai Paruppu- 2 tbsp

Dry Red Chilli - 3

Soaked Tamarind - Gooseberry sized

Chopped Ginger - few 

Salt to taste 

To Temper 

Oil - 1 tsp

Mustard Seeds - 1/2 tsp 

Urad Dhal - 1 tsp 

Broken Red Chilli - 1

Chopped Coriander Leaves - few

Curry Leaves - few

Method 

Heat oil in a pan, add dry red chilies and fry for few seconds.

Then add channa dhal, fry for 2 to3 minutes on medium flame.

Now add ginger pieces  and grated coconut then fry until gets slightly golden brown in color.

Finally add the soaked tamarind and mix well. Then switch off the flame.

Let it cool down completely and grind it as coarse paste. Then keep it in a serving bowl.

Heat o on a pan, add the tempering ingredients and sauté it for few seconds. Then transfer this into your chutney.

தேவையான பொருட்கள் 

கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் 

வரமிளகாய் /காய்ந்த மிளகாய் - 3

துருவிய தேங்காய் - 1 கப்

ஊறவைத்த புளி - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

தோல் நீக்கி நறுக்கிய இஞ்சித்துண்டு - சிறிதளவு 

தாளிக்க 

கடுகு - 1/2 

உளுத்தம்பருப்பு - 1 

உடைத்த வரமிளகாய் - 1

நறுக்கிய கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய் சேர்க்கவும். 

அதன்பிறகு கடலைப்பருப்பைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு நறுக்கிய இஞ்சித்துண்டு மற்றும் துருவிய தேங்காய்ச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

இதனுடன் ஊறவைத்த புளி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

அனைத்தையும் நன்றாக ஆறவிட்டு சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

மீண்டும் அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 

இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான சட்னி தயார். 



Saturday, October 3, 2020

Paneer Butter Pepper Fry

 This is simple, healthy and tasty dish. It’s very easy to prepare and takes only few minutes. This is protein based snack. It goes very well with fried rice, pulao, biryani, chapatti, roti and bread.


Ingredients 

Chopped Paneer - 1 Cup 

Butter - 2 tsp 

Chilli Powder - 1/4 tsp 

Freshly Ground Pepper - 1 -1/2 tsp 

Lemon Juice - 2 tsp 

Salt to taste

Ginger Garlic Paste - 1 tsp 

Oil - 1 tsp 

Method 

In a cleaned bowl, add all the ingredients except butter. Marinate everything and keep it aside for 1 to 2 hours.

Heat a pan, melt butter. Then add the marinated Paneer pieces and then shallow fry it for few minutes.

Finally transfer this into serving bowl and add some ground pepper. Serve with ketchup or any sauce.


Surprise Pie | Mixed Vegetable Pie

This is yummy, crispy vegetables pie that’s goes very well along with chocolate milk, coffee ☕️ or tea 🍵    Ingredients for Pie All Purpose...