Thursday, February 27, 2020
ஹோட்டல் சாம்பார்
தேவையானவை:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
சின்ன உருளைக்கிழங்கு - 6
துவரம்பருப்பு - கால் கப்
புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு
மஞ்சள்பொடி - சிறிது
முருங்கைக்காய் - 1
வறுத்து அரைக்க:
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
தேங்காய்த் துருவல் - கால் கப்
பெரிய வெங்காயம் - சிறியது ஒன்று
தக்காளி - பாதி
தாளிக்க:
கடுகு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை:
1.சாம்பார் செய்யத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீர் சேர்த்து 2 கப் வரும்படி கரைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
2.இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள சாமான்களை வரிசையாக வறுக்கவும்.
3.தக்காளி, வெங்காயத்தை தனியாக வதக்கவும். அரைக்க தேவைப்படும் தேங்காய் போக மீதியுள்ள தேங்காய் துருவலை 2 தேக்கரண்டி நெய்யில் சற்று சிவப்பாக வறுத்து வைக்கவும்.
4.வறுத்த பொருட்களுடன் வெங்காயம் தக்காளி மற்றும் 4 தேக்கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும்.
5.இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம், பாதி தக்காளி, முருங்கைக்காய்தோல் நீக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து சற்று வதக்கவும். புளி கரைத்த நீரை விடவும். மஞ்சள்பொடி சேர்க்கவும்.
6.தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து உருளைக்கிழங்கு வெந்ததும் அரைத்த கலவையையும், வெந்த துவரம்பருப்பும் சேர்த்து கொதிக்க விடவும். வறுத்த தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இட்லி, தோசை, பொங்கல், வடையுடன் பரிமாறவும்.
7.இந்த சாம்பாருக்கு பெரிய வெங்காயம் போட்டு செய்தால் நன்றாக இருக்கும். விருப்பப்பட்டால் சின்ன வெங்காயம் சேர்த்து செய்யலாம். சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தால்தான் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். ஹோட்டல் சாம்பாரைவிட இது இன்னும் சுவையாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Paneer Pazhmilagai Varuval
Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce. Ingredients: P...
-
It’s a famous dish and I have added freshly grounded masala powder. It gives the nice aroma and excellent taste to this dish. It is really a...
-
Ingredients Maggi – 2oo g Chopped Onion – 1 (big) Chopped Carrots – ¼ Cup Chopped Tomato – 1 Chopped Capsicum – ¼ Cup So...
-
தேவையானவை : பெரிய வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று சின்ன உருளைக்கிழங்கு - 6 துவரம்பருப்பு - கால் கப் புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு ம...

No comments:
Post a Comment