சுரைக்காய் பாயசம் செய்வதற்கு எளிமையானது, மிகுந்த சுவையுடையது . உடல் எடையை குறைக்க உகந்தது. காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சுவைப்பார்கள். சுவையான தித்திப்பான சுரைக்காய் பாயசம் ரெடி.
தேவையான பொருட்கள்
துருவிய சுரைக்காய் - 1 கப்
துருவிய வெல்லம் - 3/4 கப்
பால் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
வெண்ணை - 1
நெய் - 2
முந்திரி - 10 to 15
உலர்ந்த திராட்சை - 20
உப்பு - சிறிதளவு
அரைக்க
ஏலக்காய் - 3
துருவிய தேங்காய் 1/2 கப்
ஊறவைத்த அரிசி - 1
முந்திரி - 7
செய்முறை
ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.
பிறகு அதே பாத்திரத்தில் துருவிய சுரைக்காயை போட்டு 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும். பிறகு தேவையான அளவு நீர் ஊற்றி வேக வைக்கவும்.
அதனுடன் பால் சேர்த்து வேக வைக்கவும். பின்பு துருவிய சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் உடன் பால் சேர்த்து அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை பாயசத்துடன் கலந்து சிறிது நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.
வறுத்து எடுத்துள்ள முந்திரி திராட்சையை கலந்து வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
இதை மிதமான சூட்டிலோ அல்லது குளிர வைத்தும் தங்கள் விருப்பத்திற்கேற்ப அருந்தலாம்.
No comments:
Post a Comment