Tuesday, March 31, 2020

Cauliflower Curry/ Gobi Sabzi

It’s an easy and simple curry recipe made with cauliflower florets in a onion and tomato. This dish tastes great when flavours are well balanced. I have added the frozen green peas. This makes an ideal side dish to Chapatti or roti but can also be served as side dish curry with rice.
Ingredients 
For Curry 
Finely Chopped Onion - 1
Finely Chopped Ginger - 2 tsp
Sliced Green Chili-2
Chilli Powder - 1/2 tsp
Chopped Tomato-1
Chopped Coriander Leaves-few
Frozen Peas/Boiled Peas - 1/2 Cup
Water - 2 tsp
Lemon Juice - 1 tsp

For Blanching 
Cauliflower/Gobi Florets - 2 Cup
Salt - 1 tsp
Turmeric Powder- 1/2 tsp
Water - 4 Cups

Method

In a large vessel take 4 cup water and boil with 1 tsp salt, ½ tsp turmeric. Add 2 cup gobi and boil for 2 minutes or until gobi is blanched well. Drains off the water and keep aside.

In a kadai heat 2 tbsp oil and saute 1 inch ginger, 2 chilli and few curry leaves. Add1 onion and saute until onions shrink. Then add ½ tsp turmeric, ½ tsp chilli powder and ½ tsp salt and  saute well.


Add tomato and saute until tomatoes turn soft and mushy then add blanched gobi and ½ cup peas.
mix gently without breaking cauliflower.

Now add 2 tbsp water, cover and simmer for 5 minutes, then aadd 1 tsp lemon juice and 2 tbsp coriander, mix well. Serve cauliflower curry with hot steamed rice or roti.

Monday, March 30, 2020

Bottle Gourd Kuzhambu

This is simple bottle gourd kuzhambu made without using any dhal. Bottle Gourd is helpful to reduce for your weight loss. So try to take this veggie at least once in a week. This goes very well with white rice, Chapatti and dosa/idli.

Ingredients 
Chopped Bottle Gourd - 1 Cup
Chopped Onions- 2
Peeled Garlic-  5 pods
Chopped Tomatoes- 4 or 5
Salt to taste 
Turmeric Powder- 1/2 tsp
Ginger Garlic Paste -1 tsp
Sambar Powder- 3 tsp
Chopped Coriander Leaves- few 

To Temper
Mustard Seeds-1/2 tsp
Urad Dhal - 1 tsp
Bengal Gram -1 tsp 
Oil-1 tsp

Method 
Heat oil in a pan, add the tempering ingredients one by one and sauté it for few seconds.

Then add chopped onions, and fry till gets slight brown in color. Then add ginger garlic paste and sauté it for a minute.

Then add the chopped tomatoes and cook until it becomes mushy. Now add garlic,  chopped bottle gourd pieces along with salt and mix well.

Add turmeric powder, Sambar powder and mix well. Then add enough water and  cook until the vegetables cook completely. Then switch off the flame and and garnish with chopped coriander leaves.


சுரைக்காய் குழம்பு


சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய சுரைக்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் சுரைக்காயை மசாலா போன்று செய்து, சாதத்துடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் – 1

வெங்காயம் – 2

தக்காளி – 4 அல்லது 5

இஞ்சி, பூண்டு விழுது – சிறிது

கடுகு – 1 /2 டீஸ்பூன்

கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

சாம்பார் தூள் – 3 டீஸ்பூன்

எண்ணெய்,உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சுரைக்காயை தோல் சீவி சிறு, சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது ,கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் ,தக்காளி சேர்த்து வதக்கவும்

தக்காளி நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள் , சாம்பார் தூள் சேர்த்து வதக்கி நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து சுரைக்காயை வேக விடவும்

சுரைக்காய் நன்கு வெந்தவுடன் இறக்கி, மத்து வைத்து காயை நன்கு கடைந்து, மல்லி தழை தூவி பரிமாறவும் .


Sunday, March 29, 2020

Restaurant Style Eid Special Chicken Biryani

This is easy to make and wonderful in taste.  The outcome of the recipe is as good as the restaurant style and what could be a better feeling than getting restaurant like flavors at home. In this biryani recipe, I have used the chicken, marinated it with some aromatic spices and herbs. The following step is cooking of the rice and adding the marinated chicken to it and giving dum. I hope this wonderful chicken biryani recipe is loved by all of them and hope to receive feedbacks after trying out the recipe.



Here, in this recipe I have made use of basmati rice and making use of basmati rice for dum biryani recipes is highly recommended to get restaurant like flavors in the biryani. Here’s the recipe.
Ingredients
For Chicken Masala
Ghee - 2 tsp 
Oil - 3 tsp 
Peeled Potatoes-2(small)
Bay Leaf - 2
Cinnamon Sticks 1 inch - 2
Cloves-4
Cardamom- 3
For Chicken Marination 
Chicken - 2 lb.
Chilli Powder - 1 1/2 tsp
Turmeric Powder- 1/2 tsp
Yogurt/Curd-1 Cup
Large Onion - 1 cup ( golden fry)
Ginger Garlic Paste - 2 tsp
Chopped Tomatoes - 1 cup
Salt as required 
Chopped Coriander Leaves- a handful 
Chopped Mint Leaves- a handful 





For Rice 
Basmati Rice - 500 g ( soak it for at least 20 minuets)
Ghee - 2 tsp 
Oil - 1 tsp
Bay Leaf -1
Cardamom - 3
Cinnamon Sticks - 1 inch
Cloves-4
Black Peppercorn-8
Water as required 
Salt as required 
For Garnish 
Chopped Coriander Leaves - few
Mint Leaves- few
Method 
In a pan, and ghee and oil once it heats up add Garamond Masala ( cinnamon sticks, cloves, bay leaf, cardamom and peppercorn), lower the flame and add water and salt.

Add the soaked rice to the boiling water and let it cook on high flame. When it’s 3/4 th cooked drain t
the rice.




In a pan , heat oil and ghee, once it heats well, add Garamond Masala and peeled potatoes and cook until the potatoes turn golden brown.
Marinate the chicken by adding the ingredients which are under for chicken marination.


 
Then add the marinated chicken into the pan and mix well, the add water.
Cover it with a lid and cook on medium flame till it’s done.
Now place the cooked rice into the chicken and cover with lid on it and cook it on high flame for 8 minuets 
and low flame for 2 minuets
.

Garnish it with fresh mint leaves and chopped coriander leaves. Serve with Arita!








Saturday, March 28, 2020

கேரட் பொரியல்




தேவையான பொருட்கள்: 
பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
கேரட் - 3-4 
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 (நறுக்கியது) 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
வரமிளகாய் - 2 
கறிவேப்பிலை - சிறிது 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
நெய் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதனை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பை நீரில் ஊற வைத்து, நீரை வடித்துக் கொள்ள வேண்டும். 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். 
பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் கேரட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும். 
பின் அதில் 1/2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.


Friday, March 27, 2020

Egg Lappa / முட்டை லாப்பா


Mutta Lappa/Egg Lappa is a very popular dish from all over Tamil Nadu restaurant & road side shops. I have tasted many times in my native place. We all love this food very well. 

Due to corona issues, kids are at house. They wanted to eat egg lappa. So I made it today. It’s really a soft and fluffy dish. I have used the real ingredients, if you’re very healthy conscious person, then you should replace with wheat flour. 
Here is the recipe and enjoy well.

Ingredients:
For Parotta( roti)
All-Purpose flour (Maida) – 4 Cups
Eggs – 2

Salt to taste
Oil as required
Water as required
Milk as required
Oil – For shallow frying

For Egg Mix
Finely Chopped Onion - 1
Finely Chopped Capsicum - 1/2 Cup
Finely Chopped Tomato - 1
Finely Chopped Coriander Leaves- few
Finely chopped Chilli - 1
Salt to taste

Method:
Preparation of Dough
In a bowl, add All-Purpose flour (Maida), salt, egg, milk, oil and crumble the flour to mix all ingredients.
Now add water to make a soft dough. Cover and rest the dough for at least 1 hour.

Prepare Egg Stuffing:
In a bowl, add eggs, onion, green chilies, salt, capsicum and Coriander leaves. Beat the egg batter until it gets fluffy.

Prepare Paratha (Lappa)
Take a loaf from the dough and roll a big roti. Now place egg stuffing in the middle of the roti. Now fold the sides properly and need to cook both sides then lappa will be ready.

Frying
In a frying pan, add oil to shallow fry For egg paratha. Keep the temperature low to medium so the paratha cooks well from inside.
As you get the golden brown color from both sides.
Take it out!

Egg Lappa is ready to serve. You can serve with any sauce.

Thursday, March 26, 2020

Black Nightshade Rasam/ Sunberry Leaves Rasam/ Manattha Thakkali Rasam

Black nightshade or manathakkali /மணத்தக்காளி கீரை is a commonly available green in India and it is rich in vitamins and minerals. In native medicine, it is used for treating digestive problems and chronic skin diseases. black nightshade is effective for stomach upset and mouth ulcers. The leaves have a slight bitter taste, which gets masked by cooking.

Ingredients 
Sun berry leaves/
 Manathathakkali Leaves - 1 Cup
Chopped Onion - 1
Chopped Tomato- 1
Crushed Garlic Pods - 2
Rasam Powder - 1 tsp
Turmeric Powder- 1/2 tsp
Rice rinse water - 3 Cups
Coconut Milk- 1/4 cup
Salt to taste 
To Temper
Oil -1 tsp
Cumin Seeds - 1 tsp
Sliced green chilli - 1
Method 
Heat oil in a pan, add the tempering ingredients one by one and sauté it for few seconds.
Add chopped onions, crushed garlic with little salt and sauté it for few seconds. Then add the tomatoes and fry until it becomes mushy. 
Then add the sun berry leaves/keerai and sauté it for 3 minuets.
Add the rice rinsing water, turmeric powder, rasam powder, salt and close lid and cook it for 5 minutes.

Once it done, add coconut milk, mix well. Then switch off the flame.Serve with hot steamed white rice.

Tuesday, March 24, 2020

Boiled Eggs Fry

This is a simple and quick boiled egg fry recipe where boiled eggs are tossed with Indian spices. It can be served as a side dish for any rice or can be served with rotis. Let’s see how to prepare this yummy dish.
Ingredients 

Boiled Eggs-5
Chopped Onions - 2
Sliced Tomato-1
Salt to taste 
Turmeric Powder - 1/2 tsp
Chilli Powder - 1 tsp 
Coriander Powder - 1 tsp
Garam Masala-1/4 tsp
Sliced green Chilli - 1
Ginger Garlic Paste - 1 tsp

To Temper

Oil - 2 tsp 
Mustard Seeds- 1/2 tsp
Cumin Seeds- 1/2 tsp
Urad Dhal - 1 tsp
Cherry leaves- few

To Garnish 

Chopped Coriander Leaves-few

Method 
Heat oil in a pan. Add the tempering ingredients one by one and sauté it for few seconds. 
Add chopped onions, green chilies, salt together until they become soft. add curry leaves, ginger garlic paste and saute for a minute.
Add turmeric powder, red chili powder, coriander powder and mix well.
Remove the shells from boiled eggs, using knife make a slits into the eggs and place them in the pan and mix carefully.
Then add garam masala and mix again. cover and cook for 3-5 minutes on low flame.
Remove the lid, add chopped coriander leaves and turn off the heat.

Monday, March 23, 2020

சுரைக்காய் கூட்டு

சுரைக்காய் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு காய் வகையாகும். சுரைக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்டது என்பது அறிந்ததே. மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். சுரைக்காய் கூட்டு தேங்காய், பருப்பு போன்றவற்றை சேர்த்து செய்வதால், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: 
துண்டுகளாக்கி  சுரைக்காய் - 2 கப் 
பாசிப்பருப்பு - 1/2 கப் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - தேவையான அளவு 

அரைப்பதற்கு:
துருவிய தேங்காய் - 3/4 கப் 
வரமிளகாய் - 2 
சீரகம் - 1 டீஸ்பூன் 
அரிசி மாவு - 2 டீஸ்பூன் 


தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன் 
உளுந்து - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன் 
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை: 
முதலில் ஒரு பாத்திரத்தில் சுரைக்காயைப் போட்டு, அத்துடன் நீரில் நன்கு கழுவிய பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். 
அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்த பேஸ்ட்டை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்த்தால், சுரைக்காய் கூட்டு ரெடி!!!

பாகற்காய் கறி

உடலுக்கு சத்தான பாகற்காய், சிறுவர் முதல் பெரியவர் வரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிக்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை, அதன் கசப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் மகத்துவத்தை உணர வைத்து குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமை. கசப்பு தன்மையை குறைக்க சிறிது சர்க்கரை வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:
பாகற்காய் – 1/2 கிலோ
புளி –  சுண்டைக்காய் அளவு
மஞ்சள் தூள் –  1 சிட்டிகை
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கறி மசாலாப் பொடி – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் / சர்க்கரை - சிறிது ( விரும்பினால் சேர்க்கவும் )
தாளிக்க  
எண்ணை -  1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - 10 
செய்முறை
பாகற்காயை  முனைகளை நீக்கிவிட்டு, மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிஞ்சான பகுதிகளை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம்.
புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து பாகற்காயைச் சேர்க்கவும்.
உப்பு, மஞ்சள் தூள், புளிக் கரைசல் சேர்த்து வதக்கி மூடி வைக்கவும். வேகும்வரை அவ்வப்போது திறந்து கிளறிவிடவும்.
நன்கு வெந்து நீர் வற்றியதும், கறி மசாலாப் பொடி அல்லது ரசப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

Sunday, March 22, 2020

Spicy Yogurt Chicken Fry


Yogurt marinating is one of my favorite methods because it really helps to keep the chicken juicy!
Spicy Yogurt Chicken Fry recipe is super flavorful, tender, juicy and delicious.


Ingredients

Chicken - 1lb.

Yogurt/Curd -1 cup

Ginger Garlic Paste - 1 tsp

Chilli Powder - 1 tsp

Coriander Powder - 2 tsp

Turmeric Powder- 1/4 tsp

Garamond Masala- 1/4 tsp

Chopped Onion- 1 ( big)

Chopped Cilantro- few

Almond - 10

Salt to taste

Oil - 3 tsp

To Temper

Clove - 2

Cinnamon sticks- 1 inch

Cardamom- 2

Poppy Seeds - few
R
Chopped coriander leaves - few

Method

In a bowl, add chicken pieces, half amount of yogurt, turmeric powder, chilli powder, coriander powder, garam masala, ginger garlic paste, salt and a tsp of oil. Then marinate everything and keep it for 30 minuets or 1 hour.

In a blender add the almonds along with remaining yogurt and grind as fine paste and then keep aside.

Heat oil in a pan, add the tempering ingredients one by one and sauté it for few seconds. Then add chopped onions and fry until get slight brown in color.

Add the marinated chicken and fry for few minutes. Add the almond paste and mix well then close the lid and cook until it gets dry or till the water gets evaporated.

Garnish with chopped cilantro and serve hot.

Saturday, March 21, 2020

தக்காளி ரசம் ரெசிபி

தேவையான பொருட்கள் 
  • தக்காளி - 3
    தண்ணீர் - 3 கப் 
    பூண்டு (தோலுடன்) - 4 பல் 
    மிளகு - 1 டேபிள் ஸ்பூன் 
    சீரகம் - 2 டேபிள் ஸ்பூன் 
    உப்பு - தேவைக்கேற்ப 
    புளி - 1/2 லெமன் அளவிற்கு 
    ரசம் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் 
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
    கடுகு - 1 டேபிள் ஸ்பூன் 
    கறிவேப்பிலை - 8-10
    பெருங்காயம் - கொஞ்சம் 
    கொத்தமல்லி இலை(நறுக்கியது) - 1/2கப் 
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    செய்முறை 
    1. முதலில் தக்காளியை எடுத்து கொண்டு அதன் மேல் பகுதியை நீக்கி கொள்ளுங்கள். 2-3 செங்குத்தான துண்டுகளாக தக்காளியை வெட்டி கொள்ளுங்கள். இப்பொழுது தக்காளியை நல்ல அடிகனமான சூடான பாத்திரத்தில் போடுங்கள். 
    2. இப்பொழுது தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். தக்காளியானது நன்றாக வெந்து மென்மையாகும் வரை கொதிக்க விடவும்.
    3. இப்பொழுது வேக வைத்த தக்காளியை தனியாக ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும். அதன் தண்ணீர் பிறகு பயன்படுத்தப்படும். 5 நிமிடங்கள் அதை குளிர வைக்க வேண்டும்.
    4. பிறகு அதன் தோலை உரித்து விட்டு அதை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பல்களை நுணுக்கும் உரலில் போட்டு கொள்ளவும். 
    5. அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் சீரகம் சேர்க்கவும் இப்பொழுது உரலின் கைப்பிடியை கொண்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். 
    6. இப்பொழுது நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் உள்ள தக்காளி வேக வைத்த தண்ணீரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். 
    7. இப்பொழுது நன்றாக பிசைந்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட வேண்டும். இப்பொழுது உப்பு மற்றும் புளி சேர்த்து 8-10 நிமிடங்கள் சமைக்க வேண்டும். ரசம் பவுடரை சேர்க்கவும்.

      இப்பொழுது தாளிக்கும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்ற வேண்டும். கடுகு ற்றும் ஒரு டீ ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் கடுகு நன்றாக வெடிக்க வேண்டும் தாளித்ததை ரசத்தில் கொட்டி விடவும்.
    8. இப்பொழுது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும். இப்பொழுது நெய் சேர்க்க வேண்டும். இதை அப்படியே ஒரு பெளலிற்கு மாற்றிf சூடான ரசம் மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.



Friday, March 20, 2020

கோதுமை மாவு புட்டு /Wheat Flour Puttu

சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் கூட கோதுமை பரிந்துரை செய்யப்படக் காரணம், அதன் நார்ச்சத்துக்காகவும் மற்ற சத்துகளுக்காகவும்தான். உடலில் குளுக்கோஸை மெதுவாக ரத்தத்தில் தள்ள இதில் உள்ள நார்ச்சத்து பயன்படும். ‘க்ளைசெமிக் இண்டெக்ஸ்’ அரிசியை விட கோதுமையில் குறைவு.

கோதுமை மாவு புட்டு எப்படி செய்யலாம் என்று  பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 

செய்முறை

கோதுமைமாவை கடாயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.

ஆறியதும் உப்பு கலந்து வெந்நீர் சேர்த்து தெளித்து உதிரியாக வரும் வரை பிசையவும்.

கையால் உருண்டை  பிடித்தால் உதிரியாக விழவேண்டும்,அதுவே பதம்.

அதனை ஆவியில் 10 நிமிடம் வேகவைத்தெடுக்கவும்.

மாவை கட்டியில்லாமல் பிசையவும். கட்டியுள்ள மாவை இளஞ்சூடாக இருக்கும் போதே மாவினை மிக்ஸியில் போட்டு விப்பரில் 1 சுற்று சுற்றி எடுத்தால் நன்கு உதிரியாக இருக்கும்.

பின் அதனுடன் மீதமுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.

Thursday, March 19, 2020

புடலங்காய் கடலைப் பருப்பு பொரியல்


நமது உடலுக்கு நன்மை தரும் பலவகையான காய்கள் நமது நாட்டில் விளைகின்றன. அதில் ஒன்று தான் புடலங்காய். தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் நாம் புடலங்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும். 

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது. உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிடுவதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.

புடலங்காயில் சுவை மட்டுமின்றி, உடலுக்கு ஏற்ற பல நன்மைகளும் நிறைந்துள்ளன. எனவே இந்த காயை வாரத்திற்கு ஒரு முறையாவது சமைத்து சாப்பிடுங்கள். புடலங்காயை   வைத்து எப்படி சுவையான பொரியல் செய்வது என்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1 
கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
வர மிளகாய் - 3 
நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் புடலங்காயை உப்பு வைத்து நன்கு தேய்த்து, நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, பொடியாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொள்ள வேண்டும். 
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பைக் கழுவிப் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
 பின்னர் வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். 
அடுத்து வேக வைத்துள்ள புடலங்காயை சேர்த்து உப்பு போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, காயை வேக வைக்கவும். 
காயானது வெந்ததும், அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
காயில் உள்ள நீர் முழுவதும் வற்றியதும், அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும். இப்போது சுவையான புடலங்காய் பொரியல் ரெடி!!!















Wednesday, March 18, 2020

மெக்சிகன் ரைஸ்


தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப், 
குடை மிளகாய் - 3 (பச்சை, மஞ்சள், சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று), 
வெங்காயத்தாள் - 1 கட்டு, 
வெங்காயம் - 2, 
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி, 
தக்காளி பேஸ்டு - 1/2 கப், 
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி, 
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி, 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை
பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். குடைமிளகாய், வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய், வெங்காயத்தாள், மூன்றையும் சேர்த்து வதக்கவும்.

தேவையான உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது, சீரகம், தக்காளி பேஸ்டு, மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும். எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே குக்கரில் வைத்து வெந்ததும் எடுத்து பரிமாறவும். சூப்பரான மெக்சிகன் ரைஸ் ரெடி.

சிக்கன் ஷாவர்மா ரோல்

தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 10 மைதா - 1 கப் வெங்காயம் - 1 நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப் மயோனீஸ் (முட்டை பாலேடு) - 1 கப் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சைசாறு - 1 டீ ஸ்பூன் சர்க்கரை - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் தயிர் - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவைக்கு செய்முறை: சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காய்த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, தயிர், உப்பு ஆகியவற்றை கொட்டி அதனுடன் சிறிதளவு தண்ணீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கிளறி ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். ஊற வைத்த சாப்பத்தி மாவை சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிக்கன் துண்டு கலவையை கொட்டி சிக்கன் நன்றாக வேகும் வரை புரட்டி எடுத்துக்கொள்ளவும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிய துண்டுகளாக பிய்த்துக்கொள்ளவும். சுட்டெடுத்த ரொட்டி மீது மயோனீஸ் தடவி நடுவில் சிக்கன் துண்டு கலவையை வைக்கவும். பின்னர் அதன் மேல் வெங்காயம், முட்டைக்கோஸ் தூவி ரோலாக சுருட்டி ருசிக்கவும்.

Tuesday, March 17, 2020

காய்கறிப் பொங்கல்

காய்கறிப் பொங்கல்
வெண் பொங்கல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இன்று காய்கறிகள் சேர்த்து சத்தான ருசியான பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். நெய்யில் வறுத்த முந்திரி, கொத்தமல்லி ஆகியவற்றை அதனுடன் கலந்து சூடாக பரிமாறினால் சுவை அறுமையாக இருக்கும்.
 

தேவையானவை :

பச்சரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – அரை கப்
காய்கறி (பொடியாக நறுக்கியது) – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கேரட்- 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
நெய் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப

தாளிக்க:
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – துண்டு
லவங்கம் – 2
ஏலக்காய் – 1
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை :

1. அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேருங்கள்.

2. சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.

3. வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.

4. நெய், எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்து வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி காய்கறிக்கலவையைச் சேருங்கள்.

5. சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேருங்கள். 2 நிமிடம் வதக்கி காய் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.


6. காய்கறிப் பொங்கல் தயார்.

Surprise Pie | Mixed Vegetable Pie

This is yummy, crispy vegetables pie that’s goes very well along with chocolate milk, coffee ☕️ or tea 🍵    Ingredients for Pie All Purpose...