Friday, March 20, 2020

கோதுமை மாவு புட்டு /Wheat Flour Puttu

சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் கூட கோதுமை பரிந்துரை செய்யப்படக் காரணம், அதன் நார்ச்சத்துக்காகவும் மற்ற சத்துகளுக்காகவும்தான். உடலில் குளுக்கோஸை மெதுவாக ரத்தத்தில் தள்ள இதில் உள்ள நார்ச்சத்து பயன்படும். ‘க்ளைசெமிக் இண்டெக்ஸ்’ அரிசியை விட கோதுமையில் குறைவு.

கோதுமை மாவு புட்டு எப்படி செய்யலாம் என்று  பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 

செய்முறை

கோதுமைமாவை கடாயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.

ஆறியதும் உப்பு கலந்து வெந்நீர் சேர்த்து தெளித்து உதிரியாக வரும் வரை பிசையவும்.

கையால் உருண்டை  பிடித்தால் உதிரியாக விழவேண்டும்,அதுவே பதம்.

அதனை ஆவியில் 10 நிமிடம் வேகவைத்தெடுக்கவும்.

மாவை கட்டியில்லாமல் பிசையவும். கட்டியுள்ள மாவை இளஞ்சூடாக இருக்கும் போதே மாவினை மிக்ஸியில் போட்டு விப்பரில் 1 சுற்று சுற்றி எடுத்தால் நன்கு உதிரியாக இருக்கும்.

பின் அதனுடன் மீதமுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.

No comments:

Post a Comment

Paneer Pazhmilagai Varuval

Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce.  Ingredients: P...