தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்,
குடை மிளகாய் - 3 (பச்சை, மஞ்சள், சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று),
வெங்காயத்தாள் - 1 கட்டு,
வெங்காயம் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி,
தக்காளி பேஸ்டு - 1/2 கப்,
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி,
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். குடைமிளகாய், வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய், வெங்காயத்தாள், மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது, சீரகம், தக்காளி பேஸ்டு, மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும். எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே குக்கரில் வைத்து வெந்ததும் எடுத்து பரிமாறவும். சூப்பரான மெக்சிகன் ரைஸ் ரெடி.
No comments:
Post a Comment