- தக்காளி - 3தண்ணீர் - 3 கப்பூண்டு (தோலுடன்) - 4 பல்மிளகு - 1 டேபிள் ஸ்பூன்சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்உப்பு - தேவைக்கேற்பபுளி - 1/2 லெமன் அளவிற்குரசம் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்கடுகு - 1 டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை - 8-10பெருங்காயம் - கொஞ்சம்கொத்தமல்லி இலை(நறுக்கியது) - 1/2கப்நெய் - 2 டேபிள் ஸ்பூன்செய்முறை
- முதலில் தக்காளியை எடுத்து கொண்டு அதன் மேல் பகுதியை நீக்கி கொள்ளுங்கள். 2-3 செங்குத்தான துண்டுகளாக தக்காளியை வெட்டி கொள்ளுங்கள். இப்பொழுது தக்காளியை நல்ல அடிகனமான சூடான பாத்திரத்தில் போடுங்கள்.
- இப்பொழுது தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். தக்காளியானது நன்றாக வெந்து மென்மையாகும் வரை கொதிக்க விடவும்.
- இப்பொழுது வேக வைத்த தக்காளியை தனியாக ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும். அதன் தண்ணீர் பிறகு பயன்படுத்தப்படும். 5 நிமிடங்கள் அதை குளிர வைக்க வேண்டும்.
- பிறகு அதன் தோலை உரித்து விட்டு அதை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பல்களை நுணுக்கும் உரலில் போட்டு கொள்ளவும்.
- அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் சீரகம் சேர்க்கவும் இப்பொழுது உரலின் கைப்பிடியை கொண்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- இப்பொழுது நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் உள்ள தக்காளி வேக வைத்த தண்ணீரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.
- இப்பொழுது நன்றாக பிசைந்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட வேண்டும். இப்பொழுது உப்பு மற்றும் புளி சேர்த்து 8-10 நிமிடங்கள் சமைக்க வேண்டும். ரசம் பவுடரை சேர்க்கவும்.இப்பொழுது தாளிக்கும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்ற வேண்டும். கடுகு மற்றும் ஒரு டீ ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் கடுகு நன்றாக வெடிக்க வேண்டும் தாளித்ததை ரசத்தில் கொட்டி விடவும்.
- இப்பொழுது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும். இப்பொழுது நெய் சேர்க்க வேண்டும். இதை அப்படியே ஒரு பெளலிற்கு மாற்றிf சூடான ரசம் மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.
Saturday, March 21, 2020
தக்காளி ரசம் ரெசிபி
Subscribe to:
Post Comments (Atom)
Paneer Pazhmilagai Varuval
Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce. Ingredients: P...
-
It’s a famous dish and I have added freshly grounded masala powder. It gives the nice aroma and excellent taste to this dish. It is really a...
-
This delicious Flaxseed Detox Drink provides a lot of health benefits. It helps in desired body weight and makes your skin bright and he...
-
It is a typical Punjabi chicken recipe. And it is very popular in North Indian restaurants. Coriander Powder is the main ingredient for thi...

No comments:
Post a Comment