நமது உடலுக்கு நன்மை தரும் பலவகையான காய்கள் நமது நாட்டில் விளைகின்றன. அதில் ஒன்று தான் புடலங்காய். தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் நாம் புடலங்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது. உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிடுவதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.
புடலங்காயில் சுவை மட்டுமின்றி, உடலுக்கு ஏற்ற பல நன்மைகளும் நிறைந்துள்ளன. எனவே இந்த காயை வாரத்திற்கு ஒரு முறையாவது சமைத்து சாப்பிடுங்கள். புடலங்காயை வைத்து எப்படி சுவையான பொரியல் செய்வது என்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1
கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
வர மிளகாய் - 3
வர மிளகாய் - 3
நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
செய்முறை:
முதலில் புடலங்காயை உப்பு வைத்து நன்கு தேய்த்து, நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, பொடியாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பைக் கழுவிப் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வேக வைத்துள்ள புடலங்காயை சேர்த்து உப்பு போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, காயை வேக வைக்கவும்.
காயானது வெந்ததும், அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
காயில் உள்ள நீர் முழுவதும் வற்றியதும், அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும். இப்போது சுவையான புடலங்காய் பொரியல் ரெடி!!!
காயில் உள்ள நீர் முழுவதும் வற்றியதும், அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும். இப்போது சுவையான புடலங்காய் பொரியல் ரெடி!!!
No comments:
Post a Comment