காய்கறிப் பொங்கல்
வெண் பொங்கல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இன்று காய்கறிகள் சேர்த்து சத்தான ருசியான பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். நெய்யில் வறுத்த முந்திரி, கொத்தமல்லி ஆகியவற்றை அதனுடன் கலந்து சூடாக பரிமாறினால் சுவை அறுமையாக இருக்கும்.
தேவையானவை :
பச்சரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – அரை கப்
காய்கறி (பொடியாக நறுக்கியது) – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கேரட்- 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
நெய் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – துண்டு
லவங்கம் – 2
ஏலக்காய் – 1
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை :
1. அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேருங்கள்.
2. சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.
3. வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
4. நெய், எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்து வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி காய்கறிக்கலவையைச் சேருங்கள்.
5. சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேருங்கள். 2 நிமிடம் வதக்கி காய் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.
6. காய்கறிப் பொங்கல் தயார்.
Subscribe to:
Post Comments (Atom)
Paneer Pazhmilagai Varuval
Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce. Ingredients: P...
-
Ingredients Maggi – 2oo g Chopped Onion – 1 (big) Chopped Carrots – ¼ Cup Chopped Tomato – 1 Chopped Capsicum – ¼ Cup So...
-
It’s a famous dish and I have added freshly grounded masala powder. It gives the nice aroma and excellent taste to this dish. It is really a...
-
This delicious Flaxseed Detox Drink provides a lot of health benefits. It helps in desired body weight and makes your skin bright and he...

No comments:
Post a Comment