Monday, March 23, 2020

சுரைக்காய் கூட்டு

சுரைக்காய் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு காய் வகையாகும். சுரைக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்டது என்பது அறிந்ததே. மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். சுரைக்காய் கூட்டு தேங்காய், பருப்பு போன்றவற்றை சேர்த்து செய்வதால், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: 
துண்டுகளாக்கி  சுரைக்காய் - 2 கப் 
பாசிப்பருப்பு - 1/2 கப் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - தேவையான அளவு 

அரைப்பதற்கு:
துருவிய தேங்காய் - 3/4 கப் 
வரமிளகாய் - 2 
சீரகம் - 1 டீஸ்பூன் 
அரிசி மாவு - 2 டீஸ்பூன் 


தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன் 
உளுந்து - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன் 
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை: 
முதலில் ஒரு பாத்திரத்தில் சுரைக்காயைப் போட்டு, அத்துடன் நீரில் நன்கு கழுவிய பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். 
அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்த பேஸ்ட்டை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்த்தால், சுரைக்காய் கூட்டு ரெடி!!!

No comments:

Post a Comment

Paneer Pazhmilagai Varuval

Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce.  Ingredients: P...