பச்சைமல்லி சாதம்
அனைவரும் விரும்பும் ருசியான பச்சைமல்லி சாதம் செய்வதற்கு எளிமையானது. அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது. குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்புவதற்கு உகந்தது. உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் எந்த வகையான வருவலுடனும் இதை வைத்து உண்ணலாம்.
தேவையானவை:
பிரியாணி அரிசி / பச்சரிசி - ஒரு கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
மல்லித்தழை - 1 கட்டு
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறிய துண்டு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
நிலக்கடலை - 1 கைப்பிடி
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
அரிசியை சிறிது உப்பு சேர்த்து, எண்ணெய் விட்டு உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.
மல்லித்தழையை சுத்தம் செய்து, நன்கு அலசிக்கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயம், உளுந்து, மிளகாய் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு மல்லித்தழை, புளி சேர்த்து நன்கு வதக்கி இறக்குங்கள். இதை ஆறவிட்டு, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
பிறகு மல்லித்தழை, புளி சேர்த்து நன்கு வதக்கி இறக்குங்கள். இதை ஆறவிட்டு, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
வடித்த சாதத்தில், இந்த விழுதைச் சேர்த்து, நன்கு கலந்து வையுங்கள்.
அத்துடன் கடுகு, உளுத்தம்பருப்பு, மற்றும் நிலக்கடலை தாளித்து சேர்த்து, நெய்யை அதனுடன் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள்.
அத்துடன் கடுகு, உளுத்தம்பருப்பு, மற்றும் நிலக்கடலை தாளித்து சேர்த்து, நெய்யை அதனுடன் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள்.
பசியைத் தூண்டும் இந்தப் பச்சைக் கொத்துமல்லி சாதம்.
-Subathra Narayanan 😋-
No comments:
Post a Comment