வீட்டிலேயே ரொம்ப சுலபமா செய்யக்கூடிய குஸ்கா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலேயே பாசுமதி அரிசி அதிக அளவில் விளைகிறது.
தேவையானவை:
பாசுமதி அரிசி - ஒரு கப்
வெங்காயம் - 2 (நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (நறுக்கவும்)
தேங்காய்ப்பால் - ஒரு கப்
இஞ்சி - ஒன்றரை அங்குலம் அளவு
பூண்டு - 3
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
புதினா - ஒரு கைப்பிடி அளவு
ஏலக்காய், பட்டை, கிராம்பு - 4
அன்னாசிப்பூ - ஒன்று
பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரில் பாசுமதி அரிசியை நன்கு கழுவிச் சுத்தம் செய்து பின்னர் 15 நிமிடங்கள் குறைந்தபட்சம் ஊற வைக்கவும்.
புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதான தீயில் எண்ணெய்விட்டுச் சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பெருஞ்சீரகம் சேர்த்து வதங்கியதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்த புதினா மசாலாவைச் சேர்த்து மசாலாவில் இருந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்னர் பாசுமதி அரிசி சேர்க்கவும்.
அதில் ஒரு கப் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் மிகக் குறைந்த தீயில் 10 - 12 நிமிடங்கள் மூடி சமைக்கவும். அடுப்பிலிருந்து எடுத்து 15 நிமிடங்கள் கழித்துத் திறந்து பரிமாறவும்.
அவ்ளோதாங்க.. சுவையான குஸ்கா ரெடி..!