Monday, September 14, 2020

காரமான வெள்ளெரிக்காய் சாலட் ( கொரியன் முறையில்)

கொரியன் முறையில் செய்யப்படும் இந்த வெள்ளெரிக்காய் சாலட் சற்று வித்தியாசமானது. சிறிது காரத்தன்மை உடையது. சாதம் மற்றும் பிரைடு ரைசுடன் சாப்பிடும்போது இதன் சுவை கூடுதலாகத் தெரியும். இந்த முறையில் நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாமல்லவா?


தேவையான பொருட்கள் :

நறுக்கிய வெள்ளரி துண்டுகள் - 1 கப்
நீளவாக்கில் மெலிதாக அரிந்த
பெரிய வெங்காயம் - 1/4 கப்
நசுக்கிய இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் செதில்கள் - 2 தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
சர்க்கரை - 1 தேக்கரண்டி

செய்முறை :
ஒரு சுத்தமான கிண்ணத்தில் மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக கலந்து பறிமாறினால் சுவையான காரமான வெள்ளரிக்காய் சாலட் தயார் !

 


No comments:

Post a Comment

Paneer Pazhmilagai Varuval

Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce.  Ingredients: P...