சுழியன் ரெசிப்பி எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் ஒரு விருப்பமான இனிப்பு பலகாரம் . இது தீபாவளி பண்டிகையின் போது நாங்கள் வழக்கமாக செய்யும் இனிப்பு பலகாரம் ஆகும். சுழியத்தைச் சில ஊர்களில் சுசியம் என்றும் அழைப்பார்கள்.
இது செய்வதற்கு எளிமையானது, மாலை நேரங்களில் செய்து சாப்பிட மிகவும் பொருத்தமானது. மாவில் முக்கி எண்ணெயில இடும் போது மாவு நன்கு நனைக்கப்பட்டு பொரிக்கப்பட வேண்டும் வேண்டும் இல்லயேல் பூரணம் எண்ணெயில் உதிர்ந்து கருகிவிடும்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1 ௧ப்
துருவிய தேங்காய் - 1/2 ௧ப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - 1 முதல் 1 - 1/2 ௧ப்
உப்பு - தேவையான அளவு
ஆயில் - பொரிக்க தேவையான அளவு
மைதா மாவு கரைசல்
மைதா மாவு - 1/2 ௧ப்
உப்பு - தேவையான அளவு
குங்குமப்பூ - சிறிதளவு
சர்க்கரை - 3 to 4 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
கடலை பருப்பை வேகவைத்து மசிக்கவும். துருவிய தேங்காய், ஏலக்காயை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வெல்லத்தை கெட்டி பாகாக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காய், ஏலக்காய் பொடி, மற்றும் கடலை பருப்பு சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாக்கவும்.
மைதாவை உப்பு , குங்குமப்பூ , சர்க்கரை , மற்றும் தண்ணீர் கெட்டியாக கரைத்து வைக்கவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை மைதா மாவில் முக்கி லாவகமாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுடச்சுட சுவையான, சூப்பரான சுழியன் தயார்.
குறிப்பு.
No comments:
Post a Comment