Tuesday, September 8, 2020

முருங்கைக்கீரை சூப்

முருங்கை கீரை (murungai keerai) பொதுவாகவே எளிதில் கிடைக்கக் கூடியது. இதன் பயன்கள் ஏராளம். மேலும் முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டன. 

முருங்கைக்கீரையை சூப் செய்து குடித்தால், மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த சூப் செய்து கொடுத்தால், அவர்களுக்கு இரும்புச்சத்து அதிகம் கிடைத்து, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

முருங்கை கீரைகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் மிகவும் குறிப்பானது புண்களை ஆற்றும் தன்மை.வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்கள் அனைத்தும் இதை சாப்பிடுவதால் குணமடையும்.

முருங்கை கீரை கண்பார்வைக்கு மிகவும் உகந்தது. இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும்.இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் கண்பார்வை சிறப்பான முறையில் வளம் அடையும். குழந்தைகளுக்கு அடிக்கடி முருங்கை கீரையைச் செய்து தருவதால் கண் சம்பந்தமான குறைபாடுகள் வராமல் பாதுகாக்கலாம்.

சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் முருங்கை கீரையை உட்கொள்வதால் குணமடையும். இதை அடிக்கடி செய்து சாப்பிடுவதால் உடல் எடை மேண்மை அடையும். தேவையில்லா கொழுப்பு குறைந்து, உடல் எடை குறையும். தசைகள் வலுப்பெற்று பொலிவான தோற்றம் பெறுவீர்கள். அதிக எடையுடையவர்கள் இதை தினசரி உணவில் சேர்க்கலாம்.



தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை - 1கப்

சீரகம் - 1 டீஸ்பூன்

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)

சின்ன வெங்காயம் - 4 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

தண்ணீர் - 6 கப்

உப்பு - தேவையான அளவு

மிளகு - தேவையான அளவு

எண்ணெய்/நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் முருங்கைக்கீரை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் வேக வைத்து, மிளகு மற்றும் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், முருங்கைக்கீரை சூப் ரெடி!!!

No comments:

Post a Comment

Paneer Pazhmilagai Varuval

Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce.  Ingredients: P...