Wednesday, October 14, 2020

Soya Chunks 65/மீல் மேக்கர் 65 / சோயா 65/ Meal Maker 65

 Soya Chunks 65 is all time favorite snacks especially for kids. It has rich in protein. In this dish, Soya Chunks are soaked and squeezed then marinated with some spices and flour. Then finally it is fried in oil and served with ketchup or sauce. It’s a starter of veggie dishes or goes very well with any main dishes. You must try this recipe and enjoy well!



Ingredients

Soya Chunks (Soaked) - 2 Cup

All Purpose Flour - 1/2 Cup 

Corn Flour - 2 tbsp 

Chilli Powder - 1 tsp 

Food Color - 1/4 tsp 

Finely Chopped Ginger - 2 tsp 

Finely Chopped Green Chilli - 2 tsp 

Ground Pepper - 1 tsp 

Lemon Juice - 2 tbsp 

Chopped Coriander Leaves - few

Salt to taste 

Oil as required 

Method 

In a bowl, add all purpose flour, corn flour, ground pepper, chopped ginger, finely chopped green chilli, chopped coriander leaves, salt, chilli powder, food color, lemon juice and little bit oil. 

Then mix well and add required water to get right consistency of batter and make sure the batter should not have any lumps.

Add the soaked soya chunks and mix well. The marination is ready.

Heat oil in a pan, add the marinated soya chunks one by one.

Fry well on both sides or until it’s cooked well completely.

Once it done serve with hot sauce/ ketchup.

மீல் மேக்கர் 65 / சோயா 65


சோயா 65 ஒரு அருமையான புரதச்சத்து நிறைந்த டிஷ். இது செய்வதற்கு எளிமையானது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தது. மாலை நேரத்தில் சாக்லெட் மில்க்குடன் சேர்த்து சாப்பிடும்போது இதை விரும்பி சாப்பிடுவார்கள். குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற சுடச்சுட சூப்பரான பலகாரம். இந்த ரெசிப்பியை நீங்களும் மறக்காம செய்து பாருங்க, கண்டிப்பா உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.


தேவையான பொருட்கள் 

ஊற வைத்த மீல் மேக்கர் - 2 கப்

மைதா மாவு - 1/2 கப்

சோள மாவு  - 2 டேபிள் ஸ்பூன் 

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கலர் பவுடர் - 1/2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் 

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், கலர் பவுடர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,  கொத்தமல்லி , மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் எண்ணெய் (2 டீஸ்பூன்  ) சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.

பின்பு அதனுடன் ஊறவைத்த மீல் மேக்கர் சேர்த்து நன்றாகப் பிசறிக்கொள்ளவும். 

இதை குறைந்த பட்சம் 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரமாவது ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும்.

அதனுடன் ஊறவைத்துள்ள மீல் மேக்கர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான மீல் மேக்கர் 65 ரெடி! இதனை சில்லி சாஸ் தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.






.

No comments:

Post a Comment

Paneer Pazhmilagai Varuval

Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce.  Ingredients: P...