Tuesday, October 6, 2020

நாவில் எச்சூற வைக்கும் சிம்பிளான மீன் வறுவல் / Mouthwatering Fish Fry





நாவில் எச்சூற வைக்கும் சிம்பிளான, சூப்பரான, டேஸ்ட்டியான மீன் வறுவல் டிஷ். மீன் வறுவல் ஒரு சுவையான உணவு. மீனில் புரதச் சத்துகள் மிகுந்துள்ளன. இந்த டிஷ் செய்வதற்கு மீனை இந்தியன் மசாலாக்களுடன் பிசைந்து நன்றாக ஊற வைக்க வேண்டும் பிறகு சிறிது எண்ணெயில் வறுத்து மொறுவலாக எடுக்கப்படுகிறது. இது அனைத்து வகையான சாதத்திற்கும் பொருத்தமான சைடு டிஷ் ஆக இருக்கும். மீனில் ஒமோகா-3 என்ற ஒரு வகை அமிலம் உள்ளது. இது நம் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


மேலும் கண்பார்வை குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, இதயநோய் ஆகியவற்றிலிருந்து மீன் உணவு நம்மைப் பாதுகாக்கிறது. மீன் உடலுக்கு மிகவும் ஏற்றது. மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது.

இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் விளங்குகிறது. எனவே நாம் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 தேவையான பொருட்கள் 

மீனை ஊறவைப்பதற்கான மசாலா

மீன் துண்டுகள் - 5

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு 

எண்ணெய் - 2 டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி - சிறிது

மீன் வறுப்பதற்கு 

எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மீனை ஊற வைப்பதற்கான மசாலாக்களை எடுத்துக்கொள்ளவும். 

அதனுடன் உப்பு எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லி மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கிளறி கொள்ளவும். 

பிறகு மீன் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பிசறிக்கொள்ளவும். 

இதை குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது பிரிட்ஜில் ஊற வைக்க வேண்டும். 

தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் மீன் துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து வைக்கவும்.

இரண்டு புறமும் முழுமையாக வெந்து சிவந்து முறுவலாக வரும்வரை நன்றாக வறுத்தெடுக்கவும். 

Mouthwatering Simple Fish Fry

Ingredients 

To Marinate 

Fish Fillets - 5

Turmeric Powder - 1/2 tsp 

Chilli Powder - 1/2 tsp 

Coriander Powder - 2 tsp 

Fresh Ground Black Pepper - 1/4 tsp 

Lemon Juice - 2 tsp 

Oil - 2 tsp 

Salt to taste 

Chopped Coriander Leaves - few

Method 

In a bowl add all the spices, salt, lemon juice, oil and chopped coriander leaves then mix well.

Add the fish pieces one by one and marinate well with spices.

Then refrigerate this for at least 1 hour.

Heat oil in a dosa pan. Add the fish fillets one by one. Let it fry well on both sides.

Flip it into other sides and make sure both sides fried well in oil.

Switch off the flame and serve hot with any rice.

- Subathra Narayanan-






No comments:

Post a Comment

Paneer Pazhmilagai Varuval

Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce.  Ingredients: P...