Sweet Potatoes French Fries | சர்க்கரைவள்ளிக்கிழங்கு பிரெஞ்ச் பிரைஸ்
This is another interesting and yummy recipes. These are simply delicious. Lightly seasoned with just a hint of natural sweetness and roasted to perfection. This is slightly different from the regular fries.
Ingredients
Sweet Potatoes - 2 ( Medium)
Corn Flour - 2 TBSP
Garlic Salt - 1 tsp
Ground Pepper as required
Oil as required
Salt to taste
Method
Peel the sweet potatoes and cut into 1/2” square sticks.
Place the sweet potatoes in large ziplock bag.
Add corn flour, ground pepper, garlic salt, oil and toss to coat evenly.
Place onto a baking sheet lined with aluminum foil and space evenly apart.
Baked in a preheat 425*F oven for 20 minutes.
Turn over and bake another 20 to 15 minutes.
Serve with your dipping sauce and hot cocoa.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. இந்த கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கிழங்கை சாப்பிடுவதால் உடலில் சத்து தேவைகள் பூர்த்தியாகும்.
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு -
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கார்லிக் உப்பு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி சீவிக் கொள்ள வேண்டும்.
அதன் ஓரங்களில் முனையை நறுக்கிக்கொள்ள வேண்டும்.
அதை ஒவ்வொன்றாக எடுத்து நடுவில் குறுக்காக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு அதனை 1/2 இன்ச் சைஸில் சதுர குச்சிகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு சிப்லாக் பையில் நறுக்கிய சர்க்கரைவள்ளிக் குச்சிகள், சோள மாவு, கார்லிக் உப்பு, மிளகுத்தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக குலுக்கிக் கொள்ளவும்.
ஒரு பேக்கிங் ட்ரேயை எடுத்து, இதில் சிறிது எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும்.
பிறகு உப்பு மிளகுத்தூள் கலந்துள்ள சர்க்கரைவள்ளி குச்சிகளை அதன்மீது பரப்பிக் கொள்ளவும்.
அவனில் 425 •F ப்ரீஹீட் செய்து கொள்ளவும். அதன் பிறகு பேக்கிங் ட்ரேயை வைத்து 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
பின்பு அதனை திருப்பி போட்டு மேலும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
சிறிது நேரம் ஆறவிட்டு பறிமாறவும். சுவையான மொறுமொறுப்பான சர்க்கரைவள்ளிக்கிழங்கு பிரெஞ்ச் பிரைஸ் ரெடி!
Warm Regards,
SUBATHRA NARAYANAN