கோதுமை – 2 கப்
துருவிய தேங்காய் - ¼ கப்
பொடித்த சர்க்கரை - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு
செய்முறை:
முதலில் கோதுமையை சுத்தம் செய்து, அதனை வாணலியில் போட்டு வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாவில் உப்பு கலந்த நீரை லேசாக தூவி, புட்டுக்கு பிரட்டுவது போன்று பிரட்டி, இட்லி பாத்திரத்தில் போட்டு வேக வைத்து இறக்கினால், கோதுமை புட்டு ரெடி!!!
இந்த புட்டுடன் துருவிய தேங்காய்,
வறுத்த
முந்திரி, திராட்சை மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
No comments:
Post a Comment